வழக்குகளில் இருந்து தப்பிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் மந்திரி கைது

வழக்குகளில் இருந்து தப்பிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் மந்திரி கைது
x

மந்திரி பதவி வகித்தபோது ஊழல் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் சுந்தர் சாம் அரோரா மீது வழக்குகள் உள்ளன.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர், சுந்தர் சாம் அரோரா. பின்னர் இவர் பா.ஜனதா கட்சிக்கு தாவினார்.

மந்திரி பதவி வகித்தபோது ஊழல் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் சுந்தர் சாம் அரோரா மீது வழக்குகள் உள்ளன.

அந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க, லஞ்ச ஒழிப்புத் துறை உதவி ஐ.ஐி.க்கு சுந்தர் சாம் அரோரா நேற்று முன்தினம் இரவு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

முன்னாள் மந்திரி சுந்தர் சாம் அரோரா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு அமைந்தபிறகு கைது செய்யப்படும் 3-வது முன்னாள் காங்கிரஸ் மந்திரி சுந்தர் சாம் அரோரா ஆவார். முன்னாள் மந்திரிகள் சாது சிங் தரம்சோத், பாரத் பூஷண் ஆஷு ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

Next Story