உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏவின் பேரன் அடித்துக் கொலை


உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏவின் பேரன் அடித்துக் கொலை
x

உத்தரப்பிரதேசத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏவின் பேரன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌ,

உத்தரப்பிரதேசத்தில் கோபகஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ கேதார் சிங்கின் 35 வயது பேரன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1980-ம் ஆண்டு கோசி தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த கேதார் சிங்கின் பேரன் ஹிமான்ஷு சிங் ஆவார். இந்த நிலையில் இவர் சனிக்கிழமை இரவு, 10 மணியளவில் லைரோ டோன்வார் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்துக்குச் சென்றார்.

அப்போது அங்கிருந்த ஒரு குழுவினருடன் ஹிமான்ஷு சிங்கிற்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கும்பல் அவரை கட்டையால் தாக்கினர். இதையடுத்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஹிமான்ஷு சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story