பீகார்: கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் பலி


பீகார்: கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் பலி
x

பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாட்னா,

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மது விலக்கு அமலில் உள்ள நிலையில் சிலர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்த்து விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற கள்ளச்சாராயத்தை வாங்கி குடிப்பர்களில் பலர் உயிரிழந்து வரும் சம்பங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் கிழக்கு சம்பரன் மாவட்டம் துர்குலியா மற்றும் பஹர்பூர் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிக்சிசை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது யார்? இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story