ஆந்திராவில் மற்றொரு மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் படுகாயம்


ஆந்திராவில் மற்றொரு மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் படுகாயம்
x

தீ விபத்தில் படுகாயமடைந்த 4 பேரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமராவதி,

ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தில் மற்றொரு தனியார் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக, கடந்த 21ம் தேதி அனகாபள்ளி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 17 பேர் உயிரிழந்தனர். 45-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணிக்கு ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டியில் உள்ள மற்றொரு தனியார் மருந்து தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயங்களுடன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனகாபள்ளி காவல் கண்காணிப்பாளர் எம். தீபிகா தெரிவித்தார். இந்த விபத்தானது சினெர்ஜீன் ஆக்டிவ் இங்க்ரீடியன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சம்பவம் குறித்து அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட உள்துறை மந்திரி அனிதாவிற்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story