வங்கி ஊழியரிடம் ரூ.3.41 லட்சம் மோசடி


வங்கி ஊழியரிடம் ரூ.3.41 லட்சம் மோசடி
x

பழைய கார் வாங்கி கொடுப்பதாக கூறி , ரூ.3.41 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவமொக்கா:-

சிவமொக்கா மாவட்டம் துங்காநகர் பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் ஆன்லைன் மூலம் கார் வாங்க முடிவு செய்தார். இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ஓ.எல்.எக்சில் பழைய கார் வாங்க விரும்புவதாக கூறியிருந்தார். இதை பார்த்து டெல்லியை சேர்ந்த கார் விற்பனையாளரான ஆயுஷ் என்பவர் வங்கி ஊழியரை தொடர்பு கொண்டார். அப்போது ஆயுஷ் தன்னிடம் பழைய கார் ஒன்று உள்ளது. ரூ.3.41 லட்சம்தான் அதன் விலை. விருப்பம் இருந்தால் வாங்கி கொள்ளும்படி கூறினார். இதை நம்பிய வங்கி ஊழியர் தவணை முறையாக ரூ.3.41 லட்சத்தை செலுத்தினார். பின்னர் காருக்காக காத்திருந்தார். ஆனால் கார் வரவில்லை.

இதையடுத்து கார் விற்பனையாளரான ஆயுஷ் என்பவரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டார். அதற்கு ஆயுஷ் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்து தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த வங்கி ஊழியர் உடனே துங்காநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.


Next Story