'இந்தியா' கூட்டணி: மத்தியில் நட்பு, மாநிலங்களில் மோதலா? : மத்தியபிரதேச முதல்-மந்திரி கிண்டல்


இந்தியா கூட்டணி: மத்தியில் நட்பு, மாநிலங்களில் மோதலா? : மத்தியபிரதேச முதல்-மந்திரி கிண்டல்
x

கோப்புப்படம்

இந்தியா கூட்டணிக்கு டெல்லியில் (மத்தியில்) நட்பு, மாநிலங்களில் மோதலா என மத்தியபிரதேச முதல்-மந்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

போபால்,

எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால் மத்தியபிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 17-ந் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா கூட்டணி உறுப்பினர்களான காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகள் அங்கு தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக்கூட சமாஜ்வாடி கட்சிக்கு ஒதுக்காததால் அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேசத்தில் நாங்களும் காங்கிரசிடம் இப்படித்தான் நடந்துகொள்வோம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்தியபிரதேச முதல்-மந்திரியும், பா.ஜ.க. தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியா கூட்டணிக்கு டெல்லியில் (மத்தியில்) நட்பு, மாநிலங்களில் மோதலா? இந்தியா கூட்டணி கட்சியினர் மாநிலங்களில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டிருக்கையில், அவர்கள் மத்தியில் ஆளும் வாய்ப்பை பெற்றால் நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும்?' என்று கூறியுள்ளார்.


Next Story