வடைக்கு வழங்கிய சட்னியில் இறந்து கிடந்த தவளை - கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்


வடைக்கு வழங்கிய சட்னியில் இறந்து கிடந்த தவளை - கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
x

கேரளாவில் உள்ள ஒரு கடையில் வடைக்கு வழங்கிய சட்னியில் தவளை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பயணி ஒருவர் இரண்டு வடை வாங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த வடையை சாப்பிட முயன்றபோது, வடைக்கு வழங்கிய சட்னியில் தவளை இறந்து கிடந்ததை கண்டு அந்த பயணி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த கடையில் சோதனை நடத்தினர். சோதனையைத் தொடர்ந்து ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


1 More update

Next Story