மங்களூருவில் இருந்து தசரா தரிசன சுற்றுலா தொகுப்பு திட்ட பஸ்கள் இயக்கம்
மங்களூருவில் இருந்து தசரா தரிசன சுற்றுலா தொகுப்பு திட்ட பஸ்கள் இயக்கம் தொடங்கி உள்ளது.
மங்களூரு;
நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையையொட்டி கர்நாடக போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி) மற்றும் மங்களூரு போக்குவரத்து கழகம் சார்பில் தட்சிண கன்னடாவில் தசரா தரிசன சுற்றுலா தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்த பட்டது. இந்த திட்டத்தின் பஸ்கள் நேற்று முதல் அடுத்த மாதம்(அக்டோபா்) 5-ந்தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பஸ்களை நேற்று மங்களூரு பஸ் நிலையத்தில் இருந்து வேதவியாஸ் காமத் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்்தார்.
இந்த பஸ்கள் மங்களூரு பஸ் நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு மங்கலாதேவி கோவில், பொல்லாலி ராஜராஜேஸ்வரி கோவில், சுங்கதகத்தே அம்பிகா அன்னபூர்னேஸ்வரி கோவில், கட்டீல் துர்காபரமேஸ்வரி கோவில், சசிஹித்லு பகவதி கோவில் மற்றும் கடற்கரை, சித்ரபுரா துர்காபரமேஸ்வரி கோவில், உருவா மாரியம்மன் கோவில், குத்ரோலி கோகர்ணாநாதா கோவிலுக்கு செல்லும்.
இந்த சேவையின் முதல் 3 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. 3 பஸ்களில் 90-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் மங்களூரு கோட்ட கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேஷ் ஷெட்டி ஆகியோர் பயணித்தனர்.