ஜி-20 மாநாடு; டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை


ஜி-20 மாநாடு; டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை
x

டெல்லியில் ஜி-20 மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு செயல்திட்டம் பற்றி காவல் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ஆலோசனை நடத்தி வருகிறார்.



புதுடெல்லி,



டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்று காவல் துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இன்று ஈடுபட்டு உள்ளார். இதற்காக டெல்லியில் உள்ள காவலர் தலைமையகத்திற்கு அவர் சென்றுள்ளார்.

இந்த சந்திப்பில், 4 முக்கிய விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இதன்படி, தேச தலைநகரை பாதுகாப்பு பகுதியாக உருவாக்குவதற்கான 2024-ம் ஆண்டுக்கான செயல்திட்டம் பற்றி முதலில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஜி-20 மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும், தடய அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விசயங்களில் கவனம் செலுத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இதனையடுத்து, காமன்வெல்த் போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகள் உள்ளிட்டவற்றில் பதக்கங்களை வென்ற எண்ணற்ற காவல் அதிகாரிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியிலும் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் சி.பி.ஐ. அமைப்பு போன்று, தடய அறிவியலில் அதிக கவனம் செலுத்தி, வழக்குகளை நிரூபிப்பதற்கான சாதனங்களின் தேவை பற்றியும் மத்திய மந்திரியுடனான சந்திப்பில் டெல்லி காவல் துறை ஆணையாளர் சஞ்சய் அரோரா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


Next Story