நவ.22ல் காணொளி வாயிலாக ஜி20 மாநாடு


நவ.22ல் காணொளி வாயிலாக ஜி20 மாநாடு
x

அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

டெல்லி,

கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில், ஜி20 உச்சி மாநாடு புதுடெல்லியில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. உலக நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையில், இந்தியாவின் தனிச்சிறப்பும், தலைமைத்துவமும் இந்த ஜி20 மாநாடு வாயிலாக நிரூபிக்கப்பட்டது. இந்த மாநாடு குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டின.

ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்து, உலக நாடுகள் மத்தியில் தனது தலைமைப் பண்பை நிரூபித்துக் காட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் புவி வெப்பமயமாதல், பாலின சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் சார்பில் வரும் 22ம் தேதி ஜி-20 நாடுகளின் மாநாடு காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story