காந்தி ஜெயந்தி: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை


காந்தி ஜெயந்தி: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2023 7:53 AM IST (Updated: 2 Oct 2023 12:07 PM IST)
t-max-icont-min-icon

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல தலைவர்களும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.


Next Story