ரசாயனம் கலப்பில்லா விநாயகர் சிலை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரசாயனம் கலப்பில்லா விநாயகர் சிலைகளை மட்டுமே விற்பனை செய்து கரைக்கபடுவதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள், இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைத்து 3 நாள் சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள்.
பின்னர், 3-ம் நாள் அந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று அந்தந்த பகுதியில் உள்ள குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் ரசாயனம் கலப்பில்லா விநாயகர் சிலைகளை மட்டுமே விற்பனை செய்து கரைக்கபடுவதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்ய வேண்டும் என ரசாயனம் கலந்த விநாயகர் சிலை தயாரிப்புக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் உத்தரவிட்டுள்ளது.