போலீசை கண்டதும் ஏடிஎம்மில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் கொட்டிச்சென்ற கொள்ளையர்கள்...


போலீசை கண்டதும் ஏடிஎம்மில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் கொட்டிச்சென்ற கொள்ளையர்கள்...
x

கோப்புப்படம் 

தெலுங்கானாவில் போலீசை கண்டதும் ஏடிஎம்மில் திருடிய பணத்தை கொள்ளையர்கள்.சாலையில் கொட்டிச்சென்றனர்.

கரீம்நகர்,

தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள கொருட்லா நகரில் நேற்று அதிகாலை நான்கு பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, கும்பல் பணத்தை தூக்கிக்கொண்டு ஒடும்போது, அலாரம் அடித்தது. விரைவில், ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கும்பல்ல் வந்த கார் மீது அவர்களது வாகனத்தை போலீசார் மோதினர்.

ஆனாலும், கொள்ளையர்கள் நிறுத்தாமல், பணத்தை சாலையில் வீசிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். மொத்தம் ரூ.19 லட்சம் ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டதாக ஜக்தியால் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆர் பிரகாஷ் தெரிவித்தார்.

திருட்டில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story