ரெயிலில் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்

பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
திருஓணத்தையொட்டி கேரளாவில் ரெயில்களில் ரெயில்வே போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் தண்பட்டில் இருந்து ஆலப்புழா வந்த ஆலப்புழா-தண்பட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர்.
அப்போது ரெயிலின் சாதாரண வகுப்பு பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 22 பிஸ்கெட் பாக்கெட்டுகள் இருந்தன. அதை சோதனை செய்த ரெயில்வே போலீசார் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா இருந்ததை கண்டு ரெயில்வே போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 22 பிஸ்கெட் பாக்கெட்டுகளில் இருந்து மொத்தம் 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, பிஸ்கெட் பாக்கெட்டுகளில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






