பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடல்


பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடல்
x

சிறுத்தை நடமாட்டம் எதிரொலியாக பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

மண்டியா:

சிறுத்தை நடமாட்டம் எதிரொலியாக பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறுத்தை நடமாட்டம்

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணை அருகே பிருந்தாவன் பூங்கா அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையையொட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி பிருந்தாவன் பூங்காவுக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இதனால் அந்த சிறுத்தை, பிருந்தாவன் பூங்கா பகுதியில் நடமாடி வந்தது. இதன்காரணமாக பிருந்தாவன் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் பூங்கா முழுவதும், சிறுத்ைதயை வனத்துறையினர் அங்குலம் அங்குலமாக தேடினர். ஆனால் சிறுத்தை கிடைக்கவில்லை.

பிருந்தாவன் பூங்கா மூடல்

இதனால் சிறுத்தையை பிடிக்க பிருந்தாவன் பூங்காவில் 4 இடங்களில் வனத்துறையினர் இரும்பு கூண்டுகளை வைத்தனர். ஆனால் அதிலும் சிறுத்தை சிக்கவில்லை. இதனால் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் வனத்துறையினர் கருதினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிருந்தாவன் பூங்காவில் மீண்டும் அந்த சிறுத்தை தென்பட்டுள்ளது. சிறுத்தை நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர்.

இதுபற்றி வனத்துறையினருக்கும் தெரிவித்தனர். இதனால் அங்கு மீண்டும் சிறுத்தை பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிருந்தாவன் பூங்காவில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் தென்படுவதால், சிறுத்தை பிடிபடும் வரை பிருந்தாவன் பூங்காவை காலவரையின்றி மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முதல் பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story