"ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் மானியம் ரூ.300" - புதுச்சேரி முதல்-மந்திரி அதிரடி அறிவிப்பு


ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் மானியம் ரூ.300 - புதுச்சேரி முதல்-மந்திரி அதிரடி அறிவிப்பு
x

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், கேஸ் மானியம் ரூ.300 புதுச்சேரி பட்ஜெட் உரையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்தார்.

புதுவை,

புதுவை சட்டசபையில் முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

* அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாட திட்டம்.

* பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டியும், சென்டாக் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

* பெருந்தலைவர் காமராஜர் நிதியுதவி திட்டத்தின்கீழ் மருத்துவம், என்ஜினீயரிங், செவிலியர் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின்கிழ் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு கலை, அறிவியல், கால்நடை மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

* தற்போது கூட்டுறவுத்துறையின்கீழ் இயங்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி இனிமேல் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி துறை செயல்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.

*காமராஜர் வீடு கட்டும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்

* பொது இடங்களில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் இயந்திரங்கள் நிறுவப்படும்

* 50 புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

* கடலுக்கு அடியில் உயிரியல் பூங்கா அமைக்கப்படும்

* மீனவ முதியோர்களின் உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்படும்

* நடப்பு நிதியாண்டில் 15 கி.மீ. அளவுக்கு புதிய உயர்மின் அழுத்த பாதைகளும், 50 கி.மீ. அளவுக்கு புதிய குறைந்த மின் அழுத்த பாதைகளம் அமைக்கப்படும்.

* அனைத்து தெருமின் விளக்குகளையும் ரூ.4.50 கோடி செலவில் எல்.இ.டி. விளக்குகளாக நடப்பு நிதியாண்டில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* மின்துறைக்கு ரூ.1,946 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* புதுச்சேரி, வில்லியனூர், தவளக்குப்பம், லிங்காரெட்டிபாளையம் ஆகிய இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும்.

* கரையாம்புத்தூர், திருமலைராயன்பட்டினம் பகுதிகளல் புதியதாக தீயணைப்புநிலையம் கட்டப்படும்.

*அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் 9.36 கோடி செலவில் பொது பயன்பாட்டு கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

* பாரதியார் நினைவு அருங்காட்சியகம்-ஆய்வு மையம், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், பாரதியார் மணிமண்டபம், கீழூர் நினைவு சின்னம், தியாகி சுப்பையா-சரஸ்வதி சுப்பையா நினைவகம், சமூக அறிவியல் இலக்கிய ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் ஆகிய இடங்களில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

*தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், மேம்படுத்தவும் புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

*தமிழ்ச்சிறகம் மீண்டும் செயல்படுத்தப்படும். பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்படும். எம்.பில், பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வு உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.


Next Story