உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 இடத்தில் இருந்த அதானி 24 இடத்துக்கு தள்ளப்பட்டார்..!


உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 இடத்தில் இருந்த அதானி 24 இடத்துக்கு தள்ளப்பட்டார்..!
x
தினத்தந்தி 14 Feb 2023 2:24 PM IST (Updated: 14 Feb 2023 2:42 PM IST)
t-max-icont-min-icon

உலக பணக்காரர்கள் பட்டியலில் 24-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி.

புதுடெல்லி,

அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துவிட்டது. அதன்படி, கடந்த டிசம்பரில் ரூ.12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.4,33,297 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 24வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதானி குழும பங்கு விலைகள் நேற்று ஒரே நாளில் 5 சதவீதம் சரிந்ததால் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.51,525 வீழ்ச்சி அடைந்தது. அதானி குழும பங்கு விலைகள் இன்றும் 5 சதவீதம் சரிந்ததால் சந்தை மதிப்பு மேலும் ரூ.50,000 கோடிக்கு மேல் வீச்சியடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டன். ஓய்வுபெற்ற நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் எம்.எல்.சர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

1 More update

Related Tags :
Next Story