அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


அதிமுக பொதுக்குழுவை கூட்டி  வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் -  சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 3 Feb 2023 10:53 AM GMT (Updated: 3 Feb 2023 10:54 AM GMT)

இபிஎஸ் - ஓபிஎஸ் இருதரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டு என சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.

இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி கடந்த மாதம் (ஜனவரி) 30-ந்தேதி ஆஜராகி, இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் உள்ளிட்ட கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றி, அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதால் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்தது.

இது தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3-ந் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதனையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில் இரட்டை இலை சின்னம் அளிக்க கோரி தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி தரப்போ, ஓ.பன்னீர்செல்வம் தரப்போ அணுகவில்லை. கையெழுத்திட அதிகாரம் உள்ளவர் என தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டவர் கையெழுத்துள்ள வேட்பு மனுவைவே ஏற்க முடியும்.

ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் பணி கிடையாது. வாக்காளர் பட்டியலை தயார் செய்வதும், தேர்தல் பணிகளை கண்காணிப்பதும் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி.

ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவது இல்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார்.

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள பொதுக்குழு விவகாரம் தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களும், குறிப்பாக ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், எதிர்வழக்குகளும் நிலுவையில் இருப்பதால், ஜூலை 11-ந்தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆவணங்களாக ஏற்று தேர்தல் ஆணையம் பதிவேற்றவில்லை.

தற்போதைய சூழலில், இடையீ்ட்டு மனு தொடர்பாக விரிவான பதில் மனுவை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை. விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவும், தேவைப்படும் பட்சத்தில் விசாரணையின்போது விரிவான வாதங்களை முன் வைக்கவும் சுப்ரீம் கோர்ட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளிக்க கோருகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது.

அ.தி.மு.க விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறி உள்ளனர். பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பளிக்க எங்களை நிர்பந்திக்கிறீகளா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தி திங்கட்கிழமை பதிலளிக்கிறோம் என தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

வேட்புமனு தாக்கல் செய்ய 7 ந்தேதி இறுதி நாளாக இருக்கும் போது இதில் என்ன முடிவெடுப்பது. இந்த் விவகாரத்தில் பிறப்பிக்கபடும் எந்த உத்தரவும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் கூறினர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடமால் போகக்கூடாது.

இரட்டை இலை சின்னம் முடக்கபட்டு உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இரட்டை இலை முடக்கபடவில்லை என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி போட்டியிடலாம் என நீதிபதிகள் கூறினர்.

தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க மறுக்கிறது

ஆனால், கடந்த முறை இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த போது, மாறுபட்ட நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது.

ஜூலை 11 ந்தேதி பொதுக்குழு தீர்மானத்திற்கு எந்த நீதிமன்றமும் தடைவிதிக்காததால் அது செல்லும் என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திட தயார இருக்கிறேன். ஆனால் எனது கையெழுத்தை எடப்பாடி ஏற்க மறுக்கிறார். ஒருங்கிணைப்பாளர் என்ற த்ரப்பில் நான் வேட்பாளரை அரிவித்து உள்ளேன் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

ஓபிஎஸ் யோசனை தொடர்பாக உங்களது பதில் என்ன...? இருவரும் இணைந்து தீர்வு காணும் போது என்ன பிரச்சினை இருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடசியின் திருத்தபட்ட விதிகளின் படி ஈரோடு கிழக்கு வேட்பாளராக ட்னென்னரசு தேர்ந்து எடுக்கப்ட்டு உள்ளார் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இருவருக்கும் உகந்த பொது வேட்பாளரை தேர்ந்து எடுக்க பொதுக்குழுவை கூட்டவேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். ஜூலை 11 ந்தேதி பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்களை சேர்த்து இந்த பொதுக்குழுவை கூட்டவேண்டும் என நீதிபதிகள் கருத்து கூறினர்.

தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினர். அதன் விவரம் வருமாறு:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.திமுக வேட்பாளரை நிறுத்துவதற்கு இடைக்கால ஏற்பாடாக இந்த உத்தரவை பிறப்பிக்கிறோம்.

அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டி ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை தேர்ந்து எடுக்க வேண்டும்.

பொதுக்குழு முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரியபடுத்த வேண்டும்.

கட்சியில் இருந்து நீக்கபட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் இந்த இஅடைக்கால் ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என கூறினர்.


Next Story