இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பங்காருபேட்டையில் நடனபயிற்சி வகுப்பிற்கு செல்வதை கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பங்காருபேட்டை

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா சின்னகோடி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (வயது 18). கீர்த்தனாவிற்கு நடனம் என்றால் ஆர்வம் அதிகம். இதனால் தினமும் நேரம் கிடைக்கும்போது, பங்காருபேட்டையில் உள்ள நடன பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார்.

இது கீர்த்தனாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் நடன பயிற்சி வகுப்பிற்கு செல்லவேண்டாம் என்று கண்டித்தனர். ஆனால் கீர்த்தனா தொடர்ந்து நடன பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார்.

நேற்று முன்தினம் இது தொடர்பாக பெற்றோருக்கும், கீர்த்தனாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கீர்த்தனா மனம் நொந்த நிலையில் காணப்பட்டார். மேலும் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனா, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வெளியே சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது, கீர்த்தனா பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து பங்காருபேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடன பயிற்சி வகுப்பிற்கு செல்ல கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்தது.

இதுகுறித்து பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story