10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; உடல் நிர்வாண நிலையில் மீட்பு - அதிர்ச்சி சம்பவம்


10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; உடல் நிர்வாண நிலையில் மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
x

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காணமால் போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு காட்டுக்குள் காணாமல் போன 10 வயது சிறுமி நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்று சந்தேகம் எழுந்த நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில், அதே பகுதியை சேர்ந்த 40 வயதான சதீஷ் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்தை சதீஷ் ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து சதீஷை கைது செய்த போலீசார் அவனை சிறையில் அடைத்தனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் உடல் பிரோதபரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story