ராகுல்காந்தியின் சீன பாசம் எல்லை மீறி சென்று விட்டது: கோவா முதல்-மந்திரி கண்டனம்


ராகுல்காந்தியின் சீன பாசம் எல்லை மீறி சென்று விட்டது: கோவா முதல்-மந்திரி கண்டனம்
x

ராகுல்காந்தியின் சீன பாசம் எல்லை மீறி சென்று விட்டதாக கோவா முதல்-மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பனாஜி,

ராஜஸ்தானில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அருணாசலபிரதேச எல்லையில் சீன படையினருடன் நடந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்தார். சீனா படையெடுக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்திய அரசு தூங்குவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்திய வீரர்களை சீன படை கள் தாக்கியதாகவும் தெரிவித்தார். அவரது கருத்துக்கு கோவா மாநில முதல்-மந்திரி பிரமோத் சவந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சீனா மீதான ராகுல்காந்தியின் பாசம் மற்றும் இந்திய அரசியல் கட்சி, பிரதமர் மீதான வெறுப்பு ஆகியவை எல்லா எல்லைகளையும் தாண்டி சென்று விட்டது. இந்திய ஆயுதப்படைகள் நமது எல்லை களை துணிச்சலுடன் பாதுகாத்து வருகின்றன. இந்திய மக்கள் ஆயுதப்படைகள் மீது மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story