கொரோனா தடுப்பில் இந்தியாவுக்கு 'யுனிசெப்' பாராட்டு


கொரோனா தடுப்பில் இந்தியாவுக்கு யுனிசெப் பாராட்டு
x

தடுப்பூசியை உறுதியாக நம்பி செயல்பட்டதாக கொரோனா தடுப்பில் இந்தியாவுக்கு ‘யுனிசெப்’ பாராட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தியதிலும், தொற்றால் ஏற்படுகிற பலிகளைத் தடுப்பதிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி நம்பிக்கை திட்டத்தின் கீழ் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், தொற்றுநோய்க்குப் பிறகு 55 நாடுகளில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்து உறுதியாக இருந்தது தெரியவந்தது. ஆனால் அவற்றிலும் 52 நாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதின் முக்கியத்துவம் பற்றிய பொதுவான பார்வை குறைந்து விட்டது.

இருப்பினும் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தில் உறுதியாக இருந்து செயல்பட்ட 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஐ.நா. அமைப்பான 'யுனிசெப்' பாராட்டி உள்ளது. பிற இரு நாடுகள் சீனாவும், மெக்சிகோவும் ஆகும்.


Next Story