பெங்களூருவில் இன்று முழுஅடைப்பு: அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடும் - பி.எம்.டி.சி. தகவல்


பெங்களூருவில் இன்று முழுஅடைப்பு: அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடும் - பி.எம்.டி.சி. தகவல்
x

பெங்களூருவில் இன்று முழுஅடைப்பு நடந்தாலும் அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடும் என பி.எம்.டி.சி. தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இந்த முழுஅடைப்பு போராட்டம் காரணமாக பெங்களூரு நகரில் ஆட்டோ, கார்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஓடாது என தெரிகிறது. மேலும் இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு பி.எம்.டி.சி. மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் ஓடுமா என்று சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் பெங்களூரு நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடும் என்று பி.எம்.டி.சி. (பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம்) அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.எம்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நாளை (இன்று) முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பி.எம்.டி.சி. சார்பில் அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம் போல பஸ்கள் ஓடும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story