காஷ்மீரில் அமைதியை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தோல்வி - பரூக் அப்துல்லா


காஷ்மீரில் அமைதியை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தோல்வி - பரூக் அப்துல்லா
x

காஷ்மீரில் அமைதியை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஹஸ்ரட்பல் தொகுதியில் இன்று தேசிய மாநாட்டு கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்றார். நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா பேசியதாவது, 2019 ஆகஸ்ட் 5-ல் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டு மாநிலத்தை இரண்டாக பிரித்ததன் விளைவுகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு முனையிலும் எதிர்கொள்ளும் வேதனைகளின் ஆழத்தைப் பார்த்து மட்டுமே தீர்மானிக்க முடியும்.

2019 ஆகஸ்ட் 5-ல் எடுக்கப்பட்ட ஜனநாயகமற்ற, அரசியலமைப்பிற்கு எதிரான முடிவால் நாம் தற்போது ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் அமைதிய கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டுவர நாம் சட்டரீதியிலும், ஜனநாயக ரீதியிலும் போராடுகிறோம். நமது உரிமையை மீண்டும் பெரும் நமது போராட்டத்தில் உதவியை பெற நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறோம்' என்றார்.


Next Story