உஜ்வாலா எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் அதிகரிப்பு


உஜ்வாலா எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் அதிகரிப்பு
x

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை மத்திய அரசு 100 ரூபாய் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமாகவே உஜ்வாலா திட்டம் 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 9.6 கோடி குடும்பங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை மத்திய அரசு 100 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதன்படி, இனி ஒரு எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்து பெறும்போது, மானியத் தொகை 200க்கு பதிலாக 300 ரூபாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குவோருக்கான மானியத்தை அதிகரித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் அறிவிப்பினை வெளியிட்டார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story