கொரோனா தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் உண்டு என ஒப்புக்கொள்ளப்பட்டதா? - மத்திய அரசு பதில்


கொரோனா தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் உண்டு என ஒப்புக்கொள்ளப்பட்டதா? - மத்திய அரசு பதில்
x

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் உண்டு என ஒப்புக்கொள்ளப்பட்டதா என்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் பல்வேறு பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்), மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பும் (சிடிஎஸ்சிஓ) ஒப்புக்கொண்டுள்ளன என ஊடக தகவல் ஒன்று வெளியானது. இதையொட்டி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசிடம் (சுகாதார அமைச்சகத்திடம்) கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த ஊடக தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

அதில், "(கொரோனா தடுப்பூசி தொடர்பாக) வெளியான ஊடக தகவல் தவறானது, அந்த அறிக்கை தவறான தகவல்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவுபடுத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story