மருத்துவக்கல்லூரிகளில் இடம்பெற்ற அரசுபள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்: புதுவை முதல் மந்திரி அறிவிப்பு


மருத்துவக்கல்லூரிகளில் இடம்பெற்ற அரசுபள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்: புதுவை முதல் மந்திரி அறிவிப்பு
x

அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக செலுத்தும் என புதுவை முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு பள்ளிகளில் படித்து, 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளோருக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என்று புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மருத்துவக்கல்லூரிகளில் 10 சதவீதம் தரப்பட்டது. அரசு பள்ளியில் படித்து இடம் கிடைத்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி கட்டணம் சிரமமாக இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.

அரசு பள்ளியில் படித்து வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசானது, அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக செலுத்தும். கல்லூரிகளில் அந்த இடத்துக்கான கட்டணத்தை கல்லூரிகள் கேட்க வேண்டாம். என்று கூறியுள்ளார்.


Next Story