நாட்டின் வளர்ச்சிக்கான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளுக்கு பில் கேட்ஸ் பாராட்டு


நாட்டின் வளர்ச்சிக்கான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளுக்கு பில் கேட்ஸ் பாராட்டு
x

Image Courtesy: AFP 

பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

வாஷிங்டன்,

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பணம் செலுத்துதல், சுகாதாரம், தடுப்பூசி இயக்கம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியாவில் பல விஷயங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பதும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பதில் இந்தியாவின் முயற்சிகளைப் பில் கேட்ஸ் பாராட்டினார்.

1 More update

Next Story