வணிகம் செய்வதை ஜி.எஸ்.டி மேலும் எளிதாக்கியது: பிரதமர் மோடி பெருமிதம்


வணிகம் செய்வதை ஜி.எஸ்.டி மேலும் எளிதாக்கியது: பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 1 July 2022 10:22 AM GMT (Updated: 1 July 2022 10:23 AM GMT)

இந்தியாவில் ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கத்தில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை கொண்டு வரப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கத்தில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்த வரி விதிப்பு முறை முதல் முறை நாட்டில் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:- ஜி.எஸ்.டி வரி அமல் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. வரி விதிப்பு முறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் ஜி.எஸ்.டி, ஆகும்.

ஜி.எஸ்.டி வணிகம் செய்வதை மேலும் எளிதாக்கியது. ஒரே நாடு ஒரே வரி என்ற நாட்டின் தொலைநோக்கு பார்வையையும் நிறைவேற்றியது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது டுவிட் பதிவோடு, 'MyGovIndia' டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட, "புதிய இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை வரையறுப்பதிலும் குடிமக்களை மேம்படுத்துவதிலும் ஜிஎஸ்டி முக்கிய பங்கு வகித்துள்ளது" என்ற டுவிட்டையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.


Next Story