மோர்பி பால விபத்து: மாநில அரசுக்கு குஜராத் ஐகோர்ட் நோட்டீஸ்


மோர்பி பால விபத்து: மாநில அரசுக்கு குஜராத்  ஐகோர்ட் நோட்டீஸ்
x

குஜராத் தொங்கு பால விபத்து வழக்கை குஜராத் ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொண்டது.

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் அமைந்துள்ளது. இந்தபாலம் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டு அண்மையில் தான் மீண்டும் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்ட 4 நாட்களில் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135 பேர் பலியாகினர். நாடு முழுவதையும் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்ட விடுமுறை முடிந்து குஜராத் ஐகோர்ட் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, குஜராத் தொங்கு பால விபத்து வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொண்ட குஜராத் ஐகோர்ட், இந்த வழக்கில் பதிலளிக்கும்படி மாநில உள்துறை உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story