குஜராத்: ரூ.200 கோடி போதை பொருட்களுடன் வந்த பாகிஸ்தானிய படகு பறிமுதல்
குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருட்களுடன் வந்த பாகிஸ்தானிய படகு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வதோதரா,
குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து ஜக்காவ் கடலோர பகுதியில் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஜக்காவ் கடலோர பகுதியில் இருந்து, 33 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் பாகிஸ்தானிய படகு ஒன்று இந்திய நீர்வழி பகுதிக்குள் 6 கி.மீ. வரை நுழைந்துள்ளது.
அதனை இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர்கள், இரண்டு அதிரடி விரைவு படகுகளில் துரத்தி சென்று, தடுத்து நிறுத்தி, பின்னர் அதில் சோதனையிட்டனர்.
இதில், அந்த படகில் 40 கிலோ எடை கொண்ட ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானிய படகை பறிமுதல் செய்த படையினர் அதனை ஜக்காவ் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story