நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!


நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
x

இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது

புதுடெல்லி,

மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் 'நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வு மே 7 ஆம் தேதி மதியம் 2:00 முதல் 5:20 மணி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, மே 7 ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.


Next Story