பழுதான பா.ஜனதா அரசுக்கு வெட்கம் இல்லையா?; காங்கிரஸ் கேள்வி


பழுதான பா.ஜனதா அரசுக்கு வெட்கம் இல்லையா?; காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:45 PM GMT)

பழுதான பா.ஜனதா அரசுக்கு வெட்கம் இல்லையா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் பா.ஜனதாவின் பொய்களை எத்தனை நாட்கள் சகித்து கொள்வார்கள். பா.ஜனதா பிரதமரை அழைத்து விழா நடத்தினாலும் அதில் காலி நாற்காலிகள் இருந்தன. இந்த இரட்டை என்ஜின் அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் மட்டுமின்றி பா.ஜனதா தொண்டர்களும் வெறுப்பில் உள்ளனர். பணம் கொடுத்து பா.ஜனதாவினர் கூட்டத்தை கூட்டினர். ஆனாலும் அந்த விழாவில் நாற்காலிகள் காலியாக இருந்தன.

முன்பு சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசினர். இப்போது பிரியங்க் கார்கேவை துப்பாக்கியால் சுடுவோம் என்று மிரட்டுகிறார்கள். ஆங்கிலேயர்களின் குண்டுகளுக்கே காங்கிரஸ் பயப்பட்டது இல்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளை போல் உள்ள பா.ஜனதாவின் கோழைகளுக்கு நாங்கள் பயப்பட போகிறோம். 40 சதவீத அரசின் அயோக்கியத்தனம் மக்களுக்கு புரிந்துவிட்டது.

மக்கள் சொந்த செலவில் சாலை பள்ளங்களை மூடுகிறார்கள். இந்த பழுதான பா.ஜனதா அரசுக்கு வெட்கம் இல்லையா?. அரசு செய்ய வேண்டிய பணியை மக்களே செய்தால் எதற்காக அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.


Next Story