காதலை முறித்து கொண்ட மாணவி மீது கொலைவெறி தாக்குதல்


காதலை முறித்து கொண்ட  மாணவி மீது கொலைவெறி தாக்குதல்
x

காதலை முறித்து கொண்ட மாணவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மண்டியா: மண்டியா (மாவட்டம்) தாலுகா எரஹள்ளியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் மண்டியாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மாணவியை கண்டித்துள்ளனர். இதன்காரணமாக கல்லூரி மாணவி தனது காதலை முறித்து கொண்டார்.


மேலும் சம்பத்குமாருடன் பேசுவதையும், பழகுவதையும் அவர் நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சம்பத்குமார், நேற்று கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை கொலை வெறியோடு சரமாரியாக தாக்கினார். இதில் மாணவி பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் சம்பத்குமாரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story