அசாமில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி


அசாமில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி
x

அசாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கவுகாத்தி,

அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள போரகான் அருகே நிசார்பூரில் கனமழையால் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக அங்குள்ள ஒரு வீட்டினுள் மண்சரிவு புகுந்தது.அப்போது வீட்டினுள் தூங்கிக் கொண்டுந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் இடியாடுகளில் சிக்கிய 4 பேரை உயிரிழ்ந்த நிலையில் மீட்டனர்.

இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் நந்தினி காகதி கூறியதாவது:-

உயிரிழந்த 4 பேரும் கூலித்தொழிலாளர்கள் ஆவர்.இவர்கள் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று 4 பேரும் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மண் சரிவு வீட்டிற்குள் புகுந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேரும் சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து உள்ளூர் வாசிகளிடம் இருந்து தகவல் தெரியவந்தது. விரைந்து வந்து அவர்களை மீட்டோம்,ஆனாலும் அவர்கள் நால்வரும் உயிரிழந்தனர். விசாரணையில் மூன்று பேர் துப்ரிசையச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கோக்ரஜாரைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு அசாம் மற்றும் மேகாலயாவில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story