கேரளாவில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால், கேரளாவில் மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 29-ந்தேதி(நாளை) பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story