முன்னாள் கலெக்டரின் ஜாமீன் மனு; ஒரு வாரத்தில் ஆட்சேபனை தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவு


முன்னாள் கலெக்டரின் ஜாமீன் மனு; ஒரு வாரத்தில் ஆட்சேபனை தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

முன்னாள் கலெக்டரின் ஜாமீன் மனு மீதான வழக்கில் இன்னும் ஒரு வாரத்தி ஆட்சேபனை தெரிவிக்க கர்நாடக ஐகோர்ட்டு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:


பெங்களூரு நகர முன்னாள் கலெக்டர் மஞ்சுநாத் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஊழல் தடுப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மஞ்சுநாத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அப்போது ஊழல் தடுப்பு படை போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆட்சேனை தெரிவிக்க காலஅவகாசம் வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சந்தேஷ், இந்த ஜாமீன் மனு மீது ஒரு வாரத்திற்குள் ஆட்சேபனை தெரிவிக்கும்படி கூறி ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டுள்ளார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு நீதிபதி சந்தேஷ் ஒத்திவைத்துள்ளார்.


Next Story