குழந்தையை முதல்முறையாக வைத்திருப்பது அற்புதமானது - பேத்தியின் படத்தைப் பகிர்ந்த லாலு பிரசாத் யாதவ்
குழந்தையை முதல்முறையாக வைத்திருப்பது அற்புதமானது, உற்சாகமானது என்று தனது பேத்தியின் படத்தைப் லாலு பிரசாத் யாதவ் பகிர்ந்துள்ளார்.
பாட்னா,
பீகார் மாநிலத்தில் துணை முதல்-மந்திரியாக தேஜஸ்வி யாதவ் இருக்கிறார். இவருக்கு கடந்த ஆண்டு ராஜஸ்ரீ என்பவருடன் திருமணம் ஆனது. கர்ப்பமாக இருந்த ராஜஸ்ரீ தற்போது பெண் குழந்தை ஒன்றை டெல்லி ஆஸ்பத்திரியில் பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த செய்தியை தேஜஸ்வி யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கடந்த வாரம் சி.பி.ஐ. விசாரணையை தேஜஸ்வி எதிர்கொண்டார். விசாரணை முடிந்த பின் அவர், பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியுடன் இருந்து வந்தார்.
இந்நிலையில் குழந்தையை முதல்முறையாக வைத்திருப்பது அற்புதமானது, உற்சாகமானது என்று தனது பேத்தியின் படத்தைப் லாலு பிரசாத் யாதவ் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "சில நேரங்களில் பேரக்குழந்தைகள் உங்களிடமிருந்து உங்கள் ஆன்மாவின் ஒரு சிறிய பகுதியை எடுத்துக்கொள்கிறார்கள் என்ற உணர்வு இருக்கிறது.
உங்கள் குழந்தையின் குழந்தையை முதல் முறையாக வைத்திருப்பது ஒரு அற்புதமான, உற்சாகமான, மகிழ்ச்சியான மற்றும் மயக்கும் தருணம்.
இந்த விலைமதிப்பற்ற, புதிய, சிறிய அப்பாவி முகத்தில் நீங்கள் எதிர்காலத்தையும் கடந்த காலத்தையும் காதல், தியாகம் மற்றும் போராட்டங்களையும் உணர்கிறீர்கள். அவர்களின் சிறிய கண்களின் பொருத்தம் புதிதாக ஒன்றைக் காட்டுகிறது.
லக்ஷ்மி ரத்னா பேத்தி பிறந்த ரம்ஜான் மற்றும் சைதி சத் பண்டிகையின் புனிதமான நாளில், நவராத்திரி, மாதா ராணியின் எல்லையற்ற ஆசீர்வாதம் மற்றும் ஆசீர்வாதங்கள், நன்மைகள் மற்றும் ஆசீர்வாதங்களின் புனித மாதத்திற்கு உங்கள் மனமார்ந்த நன்றி" என்று லாலு பிரசாத் யாதவ் பதிவிட்டுள்ளார்.