சிவமொக்காவில் ஹோலி பண்டிகை கோலாகலம்


சிவமொக்காவில் ஹோலி பண்டிகை கோலாகலம்
x
தினத்தந்தி 9 March 2023 12:15 PM IST (Updated: 9 March 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் ஹோலி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது.

சிவமொக்கா-

சிவமொக்கா(மாவட்டம்) டவுனில் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சிவமொக்கா டவுனில் உள்ள துர்கிகுடி, காந்தி பஜார், வினோபா நகர், நேரு ரோடு ஆகிய பகுதிகளில் ஹோலி பண்டிகையையொட்டி ஒருவருக்கொருவர் வண்ண, வண்ண பொடிகளை பூசியும், வீசியும், தண்ணீரில் வண்ண பொடிகளை கலந்து ஒருவர் மேல் ஒருவர் ஊற்றியும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் அங்கு ஒலிக்கப்பட்ட பாடல்களுக்கு அவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஹோலி பண்டிகையை கொண்டாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இவ்வாண்டு வழக்கமான உற்சாகத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story