கேரளாவில் களைகட்டும் ஒணம் பண்டிகை: பள்ளி - கல்லூரிகளுக்கு 12-ந் தேதி வரை விடுமுறை - மாணவ- மாணவிகள் உற்சாகம்


கேரளாவில் களைகட்டும் ஒணம் பண்டிகை: பள்ளி - கல்லூரிகளுக்கு 12-ந் தேதி வரை விடுமுறை - மாணவ- மாணவிகள் உற்சாகம்
x

ஒணம் பண்டிகைக்காக கேரளாவில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவ , மாணவிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் காலாண்டு தேர்வுகள் (ஒணத் தேர்வுகள்) கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வுகள் கடந்த வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளில் ஒண கலை விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, அத்தப்பூ கோல போட்டிகள் , பாரம்பரிய கதகளி, திருவாதிரைக்களி நடன நிகழ்சிகள் உட்பட ஏராளமான கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. திருவனந்தபுரம், காட்டன் கில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இன்று ஒணம் பண்டிகையை முன்னிட்டு கலாச்சார விழா நடந்தது.

அப்போது மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலப் போட்டி நடந்தது. இதில் நூற்றுக் கணக்கான மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர்.

மாவேலி வேடமணிந்து வந்த மாவேலிக்கு மாணவிகள் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளித்தனர். விழா நிறைவாக பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் மாணவிகளுக்கு ஒண சத்யா (விருந்து) அளிக்கப்பட்டது.


Next Story