கர்ப்பிணியை அனுமதிக்காத மருத்துவமனை: சாலையில் நடந்த பிரசவம் - அதிர்ச்சி காட்சிகள்


x

தனியாக வந்த நிறைமாத கர்ப்பிணியை அனுமதிக்க திருப்பதி அரசு மருத்துவமனை மறுப்பு தெரிவித்த நிலையில், சாலையில் அந்த பெண்ணிற்கு பிரசவம் நடந்துள்ளது.

திருப்பதி,

தனியாக வந்த நிறைமாத கர்ப்பிணியை அனுமதிக்க திருப்பதி அரசு மருத்துவமனை மறுப்பு தெரிவித்த நிலையில், சாலையில் அந்த பெண்ணிற்கு பிரசவம் நடந்துள்ளது.

திருப்பதியில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தன்னந்தனியாக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். துணைக்கு யாரும் இல்லாததால் மருத்துவ நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை அருகிலேயே சாலையில் பிரசவ வலியால் அந்த பெண் துடிதுடித்தார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், பெட் சீட்டுடன் ஓடி வந்து, மறைப்பு ஏற்படுத்தி அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் தாயையும் குழந்தையையும் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறது.

அந்த பெண் தனது பெயரை கூட கூற முடியாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை அங்குள்ள காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story