பட்டப்பகலில் வீட்டின் கதவை திறந்து வைத்து டிவி பார்த்துக்கொண்டிருந்த பெண்: தங்கம், வெள்ளி நகைகளை திருடி சென்ற திருடர்கள்


பட்டப்பகலில் வீட்டின் கதவை திறந்து வைத்து டிவி பார்த்துக்கொண்டிருந்த பெண்: தங்கம், வெள்ளி நகைகளை திருடி சென்ற திருடர்கள்
x

பட்டப்பகலில் வீட்டின் முன்பக்க கதவை திறந்துவைத்துவிட்டு பெண் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் இந்ரபலிம் பகுதியை சேர்ந்த விருதுப்பள்ளி சீனிவாசன். இவர் நேற்று காலை வேலைக்கு சென்ற நிலையில் அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அவர் இன்று மதியம் வீட்டின் முன்பக்க கதவை திறந்துவைத்துவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்த 3 திருடர்கள் வீட்டின் முன்வாசல் வழியாக வந்தனர். அவர்கள் டிவி பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டினர். பின்னர், வீட்டின் பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகை, வெள்ளி நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story