'மக்களுக்கு வங்கி கணக்கும், குடிநீர் இணைப்பும் வழங்காமல் 70 ஆண்டுகளாக என்ன ஆட்சி நடத்தினார்கள்?' - மீனாட்சி லேகி கேள்வி


மக்களுக்கு வங்கி கணக்கும், குடிநீர் இணைப்பும் வழங்காமல் 70 ஆண்டுகளாக என்ன ஆட்சி நடத்தினார்கள்? - மீனாட்சி லேகி கேள்வி
x

கும்பாபிஷேக விழாவிற்காக பிரதமர் மோடியை கடவுள் ராமரே தேர்ந்தெடுத்துள்ளார் என்று மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறினார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பை நிராகரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி அறிவித்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் ராமர் கோவில் திறப்பு விழவிற்கான அழைப்பை நிராகரித்தது குறித்து மத்திய மந்திரி மீனாட்சி லேகி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கும்பாபிஷேக விழாவிற்காக பிரதமர் மோடியை கடவுள் ராமரே தேர்ந்தெடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். மக்களுக்கு வங்கி கணக்கும், குடிநீர் இணைப்பும் வழங்காமல் 70 ஆண்டுகளாக என்ன ஆட்சி நடத்தினார்கள்? அவர்களது ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெற்றன" என்று தெரிவித்தார்.


Next Story