குஜராத் மாநிலம் சூரத்தில் கார் விற்பனையகத்தில் பயங்கர தீ விபத்து


குஜராத் மாநிலம் சூரத்தில் கார் விற்பனையகத்தில் பயங்கர தீ விபத்து
x

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கார் விற்பனையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சூரத்,

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கார் விற்பனையகத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு போராடினர்.

இதுவரை, தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. தற்போது தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்புப்பணியினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story