மம்தா கட்சி பிரமுகர் வீட்டில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னணி யார்? போலீஸ் தீவிர விசாரணை


மம்தா கட்சி பிரமுகர் வீட்டில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னணி யார்? போலீஸ் தீவிர விசாரணை
x

மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு மெதினிபூர் மாவட்டம் பூபதிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மன்னா.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு மெதினிபூர் மாவட்டம் பூபதிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மன்னா. இவர், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இவரது வீட்டில் திடீரென குண்டு வெடித்தது. அதில், ராஜ்குமார் மன்னாவும், தேப்குமார் மன்னா, பிஸ்வஜித் காயென் என்பவர்களும் பலியானார்கள்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரசார் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததாகவும், இதுகுறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், சனிக்கிழமை அப்பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்ைத குறிவைத்து பா.ஜனதாவினர் வெடிகுண்டு தயாரித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையே, சம்பவம் நடந்த பூபதிநகர் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், ''குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. பின்னணியில் யார் இருக்கிறார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.


Next Story