வாடிக்கையாளர் வீட்டு செல்லப்பிராணி நாய் துரத்தியதால் 3வது மாடியில் இருந்து கீழே குதித்த டெலிவரிபாய் படுகாயம்
வாடிக்கையாளர் வீட்டு செல்லப்பிராணி துரத்தியதால் 3வது மாடியில் இருந்து கிழே குதித்த டெலிவரிபாய் படுகாயமடைந்தார்.
பெங்களூரு,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பஞ்சவதி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 3வது மாடியில் வசித்துவரும் நபர் ஆன்லைன் மூலம் மேத்தை வாங்கியுள்ளார். அந்த பொருளை நேற்று டெலிவரிபாய் இலியாஸ் (வயது 30) வாடிக்கையாளரிடம் கொடுக்க வந்துள்ளார்.
அப்போது அந்த வாடிக்கையாளரின் வீட்டில் இருந்த செல்லப்பிராணி நாய் டெலிவரிபாய் இலியாசை பார்த்து குரைத்துள்ளது. வாடிக்கையாளரின் வீட்டின் கதவு பாதி திறந்திருந்ததால் அங்கு இருந்த டாபர்மென் வகையை சேர்ந்த அந்த செல்லப்பிராணி நாய் டெலிவரிபாய் இலியாசை கடிக்க வேகமாக ஓடி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இலியாஸ் வேகவேகமாக ஓடியுள்ளார். செல்லப்பிராணி நாயின் உரிமையாளர் தனது செல்லப்பிராணியை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனாலும், டாபர்மென் நாய் கடிக்க வேகமாக வந்ததால் அதனிடமிருந்து தப்பிக்க டெலிவரிபாய் இலியாஸ் அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
3வது மாடியில் இருந்து கிழே குதித்த இலியாஸ் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.