மக்கள் அளித்த முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன... ஜெகன் மோகன் ரெட்டி ஆதங்கம்
தேர்தல் முடிவுகள் இப்படி வரும் என எதிர்பார்க்கவில்லை என ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
அமராவதி,
ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் அமராவதி நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் பேசுகையில்,
"இந்த மாதிரி முடிவுகள் வரும் என்று நான் நினைக்கவில்லை. மக்கள் அளித்த முடிவுகள் ஆச்சரியமாகவும், எதிர்பார்காத வகையிலும் உள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றியும் 40% ஓட்டை கூட பெறவில்லை.
இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு மீண்டும் எழுவோம், எதிர்க்கட்சியாக இருப்பது எங்களுக்கு புதியது அல்ல. சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆட்சிக்கு வந்துள்ள கட்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். குரலற்றவர்களின் குரலாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி செயல்படும்" என்றார்.
Related Tags :
Next Story