வீடு வேண்டும்... கோரிக்கை விடுத்த நபரை தோளில் தூக்கி, உறுதியளித்த முதல்-மந்திரி


வீடு வேண்டும்... கோரிக்கை விடுத்த நபரை தோளில் தூக்கி, உறுதியளித்த முதல்-மந்திரி
x
தினத்தந்தி 7 Sept 2023 9:22 PM IST (Updated: 7 Sept 2023 9:49 PM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வேண்டும் என கோரிக்கை விடுத்த நபரை தோளில் தூக்கி, அசாம் முதல்-மந்திரி உறுதியளித்து உள்ளார்.

கவுகாத்தி,

அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பொது கூட்டம் ஒன்றில் இன்று கலந்து கொண்டார். அப்போது, அவரை மஜிபூர் ரகுமான் என்பவர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அவர் சற்று உயரம் குறைவாக காணப்பட்டார்.

அதனால், அவரை மற்றொரு நபர் தன்னுடைய தோளில் தூக்கி வைத்து கொண்டார். அந்த விண்ணப்பத்தில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனக்கு ஒரு வீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரிடம் இருந்து விண்ணப்ப மனுவை பெற்று கொண்ட ஹிமந்தா பிஸ்வா, அவருடன் சிறிது நேரம் உரையாடினார். பின்பு, நாளை மறுநாள் அவருடைய வீடு கட்டுமான பணிகள் தொடங்கும் என உறுதி கூறினார்.

இதன்பின்னர், அவரை தன்னுடைய தோளில் தூக்கி கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றார்.


Next Story