லிங்காயத் சமுதாயத்தை பிளவுப்படுத்தவில்லை: சித்தராமையாவின் முடிவை வரவேற்கிறேன் - எடியூரப்பா பேட்டி


லிங்காயத் சமுதாயத்தை பிளவுப்படுத்தவில்லை: சித்தராமையாவின் முடிவை வரவேற்கிறேன் - எடியூரப்பா பேட்டி
x

லிங்காயத் சமுதாயத்தை பிளவுப்படுத்தவில்லை என்ற சித்தராமையாவின் முடிவை வரவேற்கிறேன் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள ரம்பாபுரி மடத்திற்கு நேற்று முன்தினம் சென்றிருந்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மடாதிபதியிடம் வீரசைவ லிங்காயத்தை பிளவுப்படுத்தவோ, உடைக்கவோ தான் முயற்சிக்கவில்லை என்றும், சிலர் தனக்கு தவறான வழியை காட்டி விட்டதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சித்தராமையாவும், ரம்பாபுரி மடாதிபதியும் என்ன பேசிக் கொண்டார்கள்? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. இந்த சந்திப்பின் போது அங்கு என்ன நடந்திருக்கும் என்பது பற்றி வெளி உலகத்திற்கு யாருக்கும் தெரியவில்லை. என்றாலும், வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை பிளவுப்படுத்த இதற்கு முன்பு சித்தராமையா நினைத்தது தவறானது. தற்போது அந்த முடிவு தவறானது என்று சித்தராமையாவே கூறி இருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் சந்தோஷம் அளிக்கிறது. சித்தராமையாவின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story