காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்வேன்


காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்வேன்
x

சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி அடைய செய்யுவேன் என்று எதிர்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மைசூரு-

தேர்தல் பிரசாரம்

மைசூரு மாவட்டத்தில் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் சித்தராமையா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டுவிட்டு அரசியலில் இருந்து விலகி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த முறை சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தேன். இது மிகவும் வருத்தம் அளித்தது. பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் என்னை திட்டமிட்டு தோற்கடித்தனர்.

இந்த முறையும் அதே முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். என்னை வீழ்த்த வியூகங்களை வகுத்து வருகிறார்கள். இதற்கு மக்கள் இடம் அளிக்க கூடாது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் 11 பேர் போட்டியிடுவதற்கு மனு அளித்தனர். அவர்களில் மாவினஹள்ளி சித்தேகவுடாவை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். அவரை மக்கள் வெற்றிபெற செய்யவேண்டும். டிக்கெட் கிடைக்காதவர்கள் அதிருப்தியடைய கூடாது. கட்சியின் வெற்றிக்காக உழைக்கவேண்டும்.

காங்கிரசை வெற்றி....

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்கு நல்ல பொறுப்பு வழங்கப்படும். அதேபோல மக்களும் வேட்பாளரை பார்த்து வாக்களிக்க கூடாது. கட்சியை பார்த்து வாக்களிக்கவேண்டும். எந்த கட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை செய்யும் என்பதை உணர்ந்து வாக்களிக்கவேண்டும். கடந்த முறை நான் சாமுண்டீஸ்வரி தொகுதியை இழந்துவிட்டேன்.

இந்த முறை நிச்சயம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரசை வெற்றி பெற செய்வேன். இதற்கு மக்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story